இந்தப் பதிவு, தகவல் தெரிவிப்பவர்கள் (விசில் ப்ளோவர் - whistle blowers) வில்லியம் டாம்ப்கின்ஸ், கோரி கூட் மற்றும் பல்வேறு நபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், பல்வேறு அமைப்புகளையும் மற்றும் அவற்றின் ரகசிய விண்வெளி திட்டங்கள் (secret space program – SSP / எஸ்.எஸ்.பி ) பற்றி சுருக்கமான வரலாற்றுடன் விளக்குகின்றது.
ராணுவ தொழில்துறை வளாக ரகசிய விண்வெளி திட்டம் அல்லது கீழ்நிலை ரகசிய விண்வெளி திட்டம்:
பெயரில் குறிப்பிட்டிருந்தது போல இது ஒரு கீழ்நிலை விண்வெளி திட்டமாகும். இதில் சந்திரனில் உள்ள ஒருசில குடியேற்றங்கள் மற்றும் உலகெங்கிலும் பல்வேறு சர்வதேச விண்வெளி நிலையங்களினைப் (International Space Station) போன்ற செயற்கைக்கோள் நிலையங்களும் அடங்கலாம். இதிலிருக்கும் மிகவும் மேம்பட்ட விண்களங்களால் சூரிய மண்டலத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும், தகவல்களின்படி. இந்த விண்வெளித் திட்டத்திற்கு நோர்டிக் ஏலியன்ஸ் என்று அழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் தவிர வேறு எந்த வேற்றுகிரகவாசிகளுடன் எந்த தொடர்புகளும் இல்லை . இந்த திட்டத்தின் அதிகாரிகள் காணப்படும் பறக்கும் தட்டுகள் அனைத்தும் அவர்களின் சொந்தமான பொருளாக இருக்கும் அல்லது பிற உயர் ரகசிய திட்டங்களின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டதாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் இரகசியத்தின் உச்சியில் இருப்பதாக நம்புகிறார்கள். மேலும் வேற்றுகிரகவாசிகள், சூரிய மண்டலங்கள், பறக்கும் தட்டுகள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அவர்கள் அறிவார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள்.
இது அமெரிக்காவிற்குரிய விமான படை பிரிவில் தோன்றியதால், இது விமானப்படையின் விண்வெளி திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையை கூற வேண்டுமெனில் இது ஒரு மிகவும் அடிப்படையான அல்லது கீழ்நிலை ரகசிய விண்வெளி திட்மாகும் மற்றும் இது டிப் ஸ்டேட் - Deep state (நிழல் அரசாங்கம், இலுமினாட்டி ரகசிய சமூகம்) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
ஜெர்மானிய பிரிவினை குழு/அமைப்பு:
இது டூலி (thule) சமூகம் மற்றும் வ்ரில் (vril) சமூகம் போன்ற ஒரு சில ஜெர்மானிய ரகசிய சமூகங்களுடன் 1920 காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. இந்த சமூகத்தில் உள்ள உறுப்பினர்கள் நோர்டிக் (Nordic) என்றழைக்கப்படும் வேற்றுகிரக இனத்துடன் தொடர்பினை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் பின்னர் திபெத்தின் கீழ் உள்ள நிலத்தடி நாகரிகம் அகர்த்தாவின் குடிமக்கள் (Agarthans) என்று கண்டறியப்பட்டனர். இவர்கள் பூமியின் உட்பகுதியில் வசிக்கின்றனர் (தேன்கூடு பூமி - Honeycomb Earth).
1940களின் பொழுது நாஜி ஜெர்மனிக்குள் பல்வேறு அமெரிக்க உளவாளிகள்/ஒற்றர்கள் நுழைந்தார்கள். அவர்களை வில்லியம் டாம்ப்கின்ஸ் மற்றும் பலர் விசாரணை செய்தார்கள். விசாரணையின் படி புவியீர்ப்பு விசையை எதிர்த்து பறக்கும் இயந்திரம் அல்லது பறக்கும் தட்டுகள் தயாரிக்கும் மிகப்பெரிய தொழில் கூடம் ஜெர்மனியில் இருப்பதாக தெரிந்தது. பல உளவாளிகளின் அறிக்கையின்படி, ஜெர்மானியர்கள் டிரெக்கோ (Draco) என்றழைக்கப்படும் தீய, ஆபத்தான வேற்றுகிரக இனத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர்.. அவர்கள் "ரேப்டில்லியன்" அல்லது " சோரியன்" என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
சுருக்கமாக கூற வேண்டுமென்றால், நாஜி ஜெர்மனி, டிரெக்கோவுடன் (Draco வேற்று கிரகவாசிகள்) உடன்பாடுகளை அமைத்துக் கொண்டது. இதன் மூலம் உயர்ந்த தொழில் நுட்பங்களை கொண்டு அவர்களால் பெரிய தேசங்களை விரைவாக கைப்பற்ற முடிந்தது. டிரெக்கோவுக்கு வேறு பெரிய குறிக்கோள்கள் இருந்தன (கீழே விளக்கப்பட்டுள்ளது). அதனால், அவர்களுக்கு நாஜி ஜெர்மனி போரினில் தோற்பது பெரிதாக தெரியவில்லை (இரண்டாம் உலகப்போர்), ஆனால் விண்வெளியில் வெற்றி பெறுவது முக்கியமாக இருந்தது.
ஹிட்லர் இறக்கவில்லை, இறந்தவர் அவரது தோற்றத்தை கொண்டிருந்த வேறொருவர். ஹிட்லரும் அவரது படைகளும் அண்டார்டிகாவுக்குச் சென்று, கண்டத்தின் பனி மேற்பரப்பின் கீழ் பல சூடான துளைகளுக்குள் (துவாரங்களுக்குள்), பண்டைய நகரங்களின் எச்சங்களில் ஒன்றில் ஒரு தளத்தை அமைத்து, எரிமலை செயல்பாடுகளால் சூடாக வைத்திருந்தன.
எஞ்சியிருக்கும் இந்த ஜெர்மானியர்களை அழிப்பதற்காக கடல் படை அதிகாரி பைர்ட்டின் (Admiral Byrd) தலைமையில் 1947 அல்லது அதற்கு மேற்பட்ட காலக்கட்டத்தில் அமெரிக்கா ஒரு பெரிய கடற்படையை அண்டார்டிகாவிற்க்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் ஜெர்மானியர்களால் விரட்டியடிக்கப்பட்டனர், இதனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த ஜெர்மானியர்களின் பல முயற்சிகளில் தோல்வியுற்ற பிறகும் டிரெக்கோவின் உதவியுடன் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களில் காலணிகளை/ குடியேற்றங்களை அமைத்தனர். இந்தப் பிரிவுதான் இப்போது டார்க் ஃப்ளீட் (Dark fleet), அதாவது இருள் படை என்று நம்பப்படுகிறது (கீழே காணவும்).
சோலார் வார்டன் (Solar Warden):
விசில் ப்ளோவர் வில்லியம் டாம்ப்கின்சின் கூற்றின்படி, ரகசிய விண்வெளி திட்டத்தின் இந்தப் பகுதி இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் அப்போதைய டக்லஸ் விமான நிறுவனத்திற்குள் இருந்த ஆராய்ச்சி குழுவில் (think tank) உருவாக்கப்பட்டது (பின்னர் இந்த டக்லஸ் விமான நிறுவனம் 1967 ஆம் ஆண்டில் மெக் டொனல் (McDonnel) விமான நிறுவனத்துடன் ஒன்றிணைந்து மெக் டொனல் டக்லஸ் (McDonnel Douglas) ஆகா உருவானது. பின்னர் இது 1997 ஆம் ஆண்டில் போயிங்குடன் இணைக்கப்பட்டது - Boeing). டாம்ப்கின்ஸிடம் அமெரிக்க கடற்படை, விண்களங்களை (காகிதத்தில் அல்லது சிறிய அளவிலான மாதிரிகளாக) வடிவமைக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர் சுமார் 1945 அல்லது அதற்குப் பின் வரும் காலகட்டத்தில் டக்லஸ் உடன் இணைந்து தனது சேவை காலகட்டத்தில் வடிவமைப்புகளில் ஈடுபட்டார்.
இவரால் வடிவமைக்கப்பட்ட மாதிரிகள், இறுதியில் அமெரிக்காவின் யூடா (Utah) என்னும் மாநிலத்தில் நிலத்தடியில் உண்மையான விண்களங்களாக கட்டப்பட்டு. 1970-80களில் (அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனுக்கு சற்று முன்னும் பின்னும்) விண்வெளியில் செயல்பட தொடங்கியது. இவை கடற்படைக்கு சொந்தமான விண்களமாகும். டாம்ப்கின்சின் கூற்றுப்படி பெரிய அளவில் இருந்த விண்களங்கள் 1 கிமீ முதல் 6 கிமீ வரை இருந்தது. இது போல அவர்கள் அதிகமான ‘ஸ்டார் வார்ஸ்’ (star wars) போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினர்.
வேற்று கிரகவாசிகள்/ஊடுருவுபவர்களிடமிருந்து சூரிய மண்டலத்தை காப்பதே
அவர்களது நோக்கமாகும் மற்றும் இது விண்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டிற்க்கும் பயன்படுகிறது. இது ஒரு மிகச் சிறிய அளவிலான குழுவாகும், இது கணக்கில் எடுத்துக் கொள்ள கூடிய அளவிற்கு பெரிய சக்தி ஒன்றுமல்ல. சிறிய (வேற்று கிரக) கொள்ளையர்கள் மற்றும் ஊடுருவும் நபர்களை கண்காணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சோலார் வார்டன் இப்போது ரகசிய விண்வெளி திட்டங்களின் /எஸ்.எஸ்.பி-யின் கூட்டணியில் (SSP Alliance) ஒரு பகுதியாக இருப்பது போல் தெரிகிறது (கீழே காணவும்). ஏனெனில் அவர்கள் ஐ.எஸ்.எஸ் - சர்வதேச விண்வெளி நிலையம் முன் தங்களுடைய விண்களங்களுடன் தென்பட்டதாக தெரிகிறது மற்றும் அவர்களுக்கு டிப் ஸ்டேட் / Deep state (நிழல் அரசாங்கம், இலுமினாட்டி ரகசிய சமூகம்) உடன் ஒருவித பனி போர் இருப்பதாக தெரிகிறது. இதிலிருந்து இவர்கள் நிழல் அரசாங்கம்/இலுமினாட்டி ரகசிய சமூகம் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிகிறது. இருப்பினும் எத்தனை சதவீதம் பேர் நிழல் அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.இன்டர் பிலானடரி கார்ப்பரேட் கோங்க்லோமெரேட் - ஐசிசி (interplanetary corporate conglomerate (ICC):
இவை ஜெர்மன்-அமெரிக்க நிறுவனங்களாக தெரிகிறது. ப்ராஜெக்ட் பேப்பர் கிலிப் (Project Paperclip) என்பதை பற்றி ஆராய்ச்சி செய்யவும் (அதாவது ப்ராஜெக்ட் பேப்பர் கிலிப் என்பது - இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வியின் பின்னர், ஜெர்மன் நாஜி விஞ்ஞானிகளை ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வந்ததன் பின்னர், அவர்களை அமெரிக்க விஞ்ஞானிகளாக பணியமர்த்தியது).
ஆரம்பத்தில், ஐம்பதுகளின் (1950s) காலகட்டத்தில் பிரிந்து சென்ற ஜெர்மானியர்களுக்கு (ஜெர்மன் பிரிந்து சென்ற பிரிவு குழுவினை குறித்து மேலே காண்க), விண்வெளியில் விரிவடைவது மற்றும் காலணிகளை/ குடியேற்றங்களை அமைப்பது, முதலியவற்றிற்கு - அமெரிக்கர்களின் பெரிய உள்கட்டமைப்பு தேவைப்பட்டதால், அமெரிக்காவை ஒப்பந்தத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தியது (பல பறக்கும் தட்டுகள் பறந்து சென்ற சம்பவங்கள், நாற்பதுகளின் பிற்பகுதியிலும், ஐம்பதுகளின் முற்பகுதியிலும் பரவலாக தெரிவிக்கப்பட்டது).
பின்னர், அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் ஊடுருவ திட்டமிட்டது. ஜெர்மனியர்கள் ஏற்கனவே பல கிரகங்கள் மற்றும் விண்கற்களை ஆராய்ந்திருந்தனர். மேலும், டிரெக்கோவுடனான அவர்களின் கூட்டணியுடன், சூரிய குடும்பத்தின் வரலாறு, பூமியின் வரலாறு, பல்வேறு விண்கற்கள் அல்லது பிற கிரகங்களில் உள்ள இயற்கை வளங்கள் போன்ற பல்வேறு தகவல்களை பற்றி சிறிது அறிந்திருந்தார்கள். ஜெர்மானியர்கள் தங்கம், பிளாட்டினம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் நிறைந்த சிறுகோள்கள் பற்றியும் அங்கு தங்களுக்கு சொந்தமான சுரங்க செயல்பாடுகள் பற்றியும் (அமெரிக்க) பெருநிறுவனங்களுக்கு தெரிவிக்கத் தொடங்கியது. இந்த தகவல்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அமெரிக்கர்களை தங்களுடைய வலையில் வீழ்த்த திட்டமிட்டனர். பேராசை கொண்ட நிறுவனங்கள் இதனை பின்பற்றி, பணம்/வணிக காரணிகளை மட்டுமே மையமாகக்கொண்டு ஜெர்மானியர்களுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டன. விரைவில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் ப்ராஜெக்ட் பேப்பர் கிலிப் (மற்றும் ஜெர்மன் பிரிந்து சென்ற பிரிவு குழு) ஜெர்மானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு கோரி கூட் மற்றும் வில்லியம் டாம்ப்கின்ஸின் சான்றுரைகளை பார்க்கவும்.
கோரி கூட்டின் படி, இது மிகப்பெரிய, சக்தி வாய்ந்த ரகசிய விண்வெளி திட்மாக/பிரிவாக மாறியது. இப்பொழுது, சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து உள்கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது (அதாவது தளங்கள், குடியேற்றங்கள், உற்பத்தி வசதிகள், பணியாளர்கள் போன்றவை). இவை கிட்டத்தட்ட அனைத்து விண்வெளி நிறுவனங்களையும் மற்றும் பூமியில் உள்ள பல பெரிய நிறுவனங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் அல்லது தங்களுக்கு சொந்தமாக கொண்டுள்ளது (லாக்கீட் மார்ட்டின், போயீங், மெக்டொனால்ட், முதலியன) மற்றும் பிற நிறுவனங்கள் (வில்லியம் டாம்ப்கின்ஸின் கூற்றின் அடிப்படையில் பூமியின் அனைத்து பெரிய நிறுவனங்களும் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது).
இவர்களுக்கு 900க்கும் மேற்பட்ட வேற்றுகிரக நாகரிகங்களுடன் தொழில்நுட்ப பரிமாற்றம், விண்வெளி கேட்ஜெட்டுகள் மற்றும் மனித அடிமை வர்த்தகம் முதலியவற்றிற்கான ஒப்பந்தங்கள் அல்லது பிணைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இவர்கள் அனைத்து எஸ்எஸ்பி/ ரகசிய விண்வெளி பிரிவுகளை விட மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளனர். மேலும், மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் தயாரிப்பதற்காக லட்ச கணக்கான மனித அடிமைகள் இவர்களின் குடியேற்றங்களிலும் தொழில்நுட்ப தளங்களிலும் வேலை செய்கிறார்கள்.
அடிமைகள் என்றால் யார்?
கடந்த 50 ஆண்டுகளில் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் பூமியில் இருந்து பல லட்ச கணக்கான மனிதர்கள் காணாமல் சென்றுள்ளனர். இதில் சில மிக அறிவாளிகளான மக்களும், மேதைகளும் அடங்குவர். இவர்களுக்கு “ஸ்டார் ட்ரெக்” மற்றும் “ஸ்டார் வார்ஸ்” படங்களில் காட்டும் உலகம் போன்ற, தொழில்நுட்பங்கள் கொண்ட வாழ்க்கையை வாழ முடியும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் உலகத்திற்கு வெளியேயுள்ள குடியேற்றங்களில்தரை இறங்கியவுடன் (இது செவ்வாய் கிரகத்தில் உள்ள குடியேற்றங்களாக இருக்கலாம் அல்லது பிற கிரகங்களின் துணைக்கோளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்) வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனம் மற்றும் எந்திரங்களை/ரோபோக்களை போல உழைப்பது என்றுவிரைவாக உணர்ந்து கொண்டனர். பீட் பீட்டர்சன் (Pete Peterson) மற்றும் கோரி ஆகியோரின் படி ஐம்பதுகளின் பிற்பகுதியில் மற்றும் அறுபதுகளில், சுமார் 5-6 கோடி மக்கள் உலகம் முழுவதிலுமிருந்து, மேலே கூறியுள்ளபடி போலியான வாக்குறுதிகளுடன் வேற்று கிரகத்தில் உள்ள தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அமெரிக்கா/கனடாவில் மட்டும் 25% மக்கள் அழைத்து செல்லப்பட்டனர். இது அதிக பயிற்சி பெற்ற அல்லது தகுதி பெற்ற நபர்களின் இடப்பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது (brain drain).
உலக ஐக்கிய நாடுகளின் சங்கம்:
இது ஒரு கீழ்நிலை விண்வெளி திட்டம் ஆகும். மற்ற அமைப்புகள் போல தொழில்நுட்பங்களும், விண்கலங்களும் இவர்களிடம் இல்லை. இது உலகின் மற்ற நாடுகளுக்கு, “விண்வெளியில் எதோ நடக்கிறது” என்ற சந்தேகம் வந்ததன்பின், அவர்களை அமைதி ஆக்குவதற்கு, அவர்களுக்கு (இந்த நாடுகளுக்கு) 10% முதல் 20% உண்மைகள்/தகவல்கள் மட்டுமே மற்ற மேம்பட்ட விண்வெளி அமைப்புக்களால் அளிக்கப்பட்டது. 100% உண்மையான தகவல்கள் அளிக்கப்படவில்லை. விண்வெளியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதனை இவர்கள் அறிந்து கொள்ளப்படாத படி இவர்கள் இருளிலேயே வைக்கப்பட்டனர். இந்த விண்வெளி திட்டத்தை விண்வெளியின் ஐக்கிய நாடுகள் என்று கருதலாம்.
இது 80கள் அல்லது 90களில் தொடங்கப்பட்டிருக்கலாம். இந்த திட்டத்தின் உறுப்பினர்களுக்கு (நாடுகளுக்கு) விண்வெளியில் உள்ள எதார்த்தங்களின் உண்மையான விடயங்களும், நோக்கத்தையும் மறைக்க தவறான கதை வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட கதைகள் வேற்றுகிரகவாசிகளின் அச்சுறுத்தல்கள் அல்லது படையெடுப்புகள் இருப்பதனை போன்றது. எனவே நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் (ஐநா போன்றவை) என்றது. பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘ஸ்டார்கேட் அட்லாண்டிஸ்’ என்பது, இந்த விண்வெளித் திட்டத்தின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ரகசிய தகவல்களை பொழுதுபோக்கு என்னும் பெயரில் கசிய விடுவதாக தெரிகிறது. இந்த விண்வெளி திட்டம் அனைத்து நாடுகளிலிருந்தும் பணிபுரியும் மக்களைக் கொண்டுள்ளது, அனேகமாக, அவர்கள் சூரிய மண்டலத்திற்கு முற்றிலும் வெளியில் இருக்கிறார்கள். நம் விண்மீன் /நட்சத்திரக் கூட்டத்தில் (local star cluster) - சூரிய மண்டலம்போல் அருகே பல விண்மீன்/நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. அண்டையில் உள்ள எதோ ஒரு விண்மீன்/நட்சத்திர மண்டலங்களில் ஒன்றில் வாழ்கின்றனர்.
இருள் படை (டார்க் ஃபிலீட் – Dark Fleet):
இருள் படை/டார்க் ஃபிலீட் என்பது ஜெர்மன் பிரிவு/குழு அல்லது அவர்களிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவு. இது மிகவும் அச்சத்திற்குரிய விண்வெளிக் அமைப்பு மற்றும் டிரெக்கோவுடன் கூட்டணியில் உள்ளது. இவர்கள் ஒரு தாக்குதல் படையாவர். இவர்கள் புதிய விண்வெளி தளங்களை/கோள்களை கைப்பற்றுவதற்காக அல்லது டிரெக்கோவின் தளங்களை/கோள்களை பாதுகாப்பதற்காக சூரிய மண்டலத்திற்கு வெளியே பயணிக்கிறார்கள். இவர்கள் டிரெக்கோவின் ராணுவ பயணங்களுக்கும் உதவுகிறார்கள்.
கோரியின் கூற்றின்படி, டாம்ப்கின்ஸ் தனது சாட்சியங்களுடன் வருவதற்கு முன் வரை, இந்த ரகசிய அமைப்பு பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள படி ஜெர்மன் அமைப்பின் கீழ் இரண்டாம் உலகப் போரின் பொழுது நாஜி ஜெர்மனியில், நாஜிக்களிடம் அந்த காலத்திற்கு மிகவும் மேம்பட்ட பல தொழில்நுட்பங்கள் இருந்தன என்பதை நாம் அறிகிறோம். அவர்கள் ரகசியமாக, உலகிற்கு தெரியாமல் ஒரு வேற்று கிரக இனத்துடன் இணைந்தனர். இதனை ரெப்டீலியன்ஸ் என்று டாம்ப்கின்ஸ் அழைக்கிறார். அவர்களை டிரெக்கோ என்று கூட அழைக்கலாம். இந்த கூட்டணிக்கு இடையிலான பிற தொழில்நுட்ப பரிமாற்றங்களை தவிர, நாஜிகளுக்கு மேம்பட்ட 'குலோனிங்' தொழில் நுட்பமும் வழங்கப்பட்டது. இதனை அவர்கள் இரண்டாம் உலகப்போரில் சோதனை செய்தனர். இதன் மூலம் ஒரு போர் வீரர்களின் படையை 'க்லோன்' செய்து ரஷ்யாவிற்கு எதிராக அதனை பயன்படுத்த அனுமதித்தனர். 'குலோனிங்' மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், இது மிகப் பெரிய அளவில் தொடங்கப்பட்டது. இப்படி, ஆரம்பத்தில் க்லோன் செய்யப்பட்ட ஜெர்மன் படைகள் இந்த 'இருள் படை/டார்க் ஃபிலீட்டிற்கு' முன்னோர்கள் ஆனார்கள், என்று கூறப்படுகிறது.
அவர்கள் இப்பொழுது இருள் படையின்/டார்க் ஃபிலீட்டின் மிக பெரிய போர் படைகளாக இருக்கிறார்கள். அதாவது, இந்த படைகள் பின்னர் பல கோடி கணக்கான வீரர்களை க்லோன் செய்வதற்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டனர். பின்னர் இவர்கள் டார்க் ஃபிலீடில் பணியமர்த்தப்பட்டனர்.
ஒற்றுமை: ஸ்டார் வார்ஸ் படைகள். |
இந்த கூட்டணியில், ரெப்டீலியன்ஸின் (டிரெக்கோவின் மறுபெயர்) கோரிக்கை என்னவென்றால், அவர்களின் விண்வெளி படையை வளர்த்துக் கொள்ளவும், அவர்களது போரின் பொழுது அவர்களுக்கு ஆதரவாக எதிர்த்துப் போராடவும் - இது அவர்களின் தளங்களை, கோள்களை பாதுகாக்க அல்லது விண்மீன் மண்டலம் (galaxy) முழுவதும் புதிய தளங்களை/கோள்களை கைப்பற்றுவதற்காக, மற்றும் முழு கோள்களையே தோற்கடித்து, அதனை ஆக்கிரமித்ததன் பின்னர், அதன் குடிமக்களை அடிபணிய செய்ய உதவ வேண்டும் என்பதுதான். மற்ற படி, இந்தப் பிரிவு ஐசிசி/ICC குழுவை (மேலே காணவும்) விட சக்தி வாய்ந்ததாக உள்ளது. அவர்களிடம் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த விண்கலங்கள் உள்ளன. அதில் சிலவை பூசணி விதை வடிவிலானவை. மற்றவை சதுர/சாய்சதுர வடிவிலானவை, மற்றவை ஆப்பு வடிவ / முக்கோண வடிவிலானவை. கிட்டத்தட்ட “ஸ்டார் வார்ஸ்” போன்ற திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள “பேரரசின் அழிக்கும் விண்கலங்களை” (Galactic empire’s destroyer crafts) போன்றவை. இதில் மிகப் பெரியவை 600 அடிக்கும் மேல் இருக்கும்.
மூலம்: https://spherebeingalliance.com |
ஐசிசி/ICC அவர்களுக்கு உள்கட்டமைப்பு, கலன்கள் மற்றும் ஆயுதங்களை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் டிரெக்கோ அதனை மேலும் மேம்படுத்துவதில் இவர்களுக்கு உதவியுள்ளது - சூரிய மண்டலத்துக்கு வெளியே தாக்குதல் செயல்பாடுகளுக்காக..
அவர்கள் சூரிய மண்டலத்திற்கு வெளியே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். இதில் மனிதர்கள் உள்ளார்கள், ஆனால் டிரெக்கோவிற்கு கட்டுப்பட்டு வேலை செய்கிறார்கள். இதில் இருக்கும் பெரும்பாலான மக்கள் ஜெர்மனியின் ரகசிய சமூகம் அல்லது நாஜி போன்றவற்றில் இருந்து வந்தவர்கள்.
டிரெக்கோ (வேற்று கிரக ஊர்வன இனம் - ரெப்டிலியன்ஸ்):
இவர்கள் முழு விண்மீன் மண்டலத்திலும் மிகவும் பயங்கரமான மற்றும் பெரிய (ஆபத்தான / எதிர்மறையான) இனமாக பார்க்கப்படுகிறது.
மூலம்: https://en.wikipedia.org/wiki/File:Kom_Ombo,_Sobek_0320.JPG |
எகிப்து, ஈராக் மற்றும் அமெரிக்காவில் உள்ள பழமையான இடிபாடுகளை காணும்பொழுது, அவற்றில் மனிதர்களுக்கு இறக்கை இருப்பது போன்றும் அதன் உருவம் பாம்புகள், பல்லிகள் போன்ற ஊர்வனவற்றின் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இந்த சிற்பங்களுக்கு என்ன பொருள்? இதனை பண்டைய மனிதனின் கற்பனை தான், என்று நாம் நம்ப வேண்டும் என விஞ்ஞானிகள் நினைப்பதற்கு ஏற்ப இதனை விட்டுவிட முடியுமா?
இவை உலகின் மிக பழமையான நாகரிகங்களின் காவிய கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . இது ஒரு தனி ஊர்வன-மனித இனமாக இருக்கலாம் அல்லது
பலவிதமான ஊர்வன (ரெப்டிலியன்) மனித இனங்களாக இருக்கலாம். இவை (ரெப்டிலியன்/டிரெக்கோ) பிற வேற்றுகிரக இனங்களுடன் நீண்ட காலமாக போரில் ஈடுபட்டுள்ளது. எஸ்எஸ்பி/ரகசிய விண்வெளி திட்டத்தில் உள்ளே இருப்பவர்களின் (கோரி, வில்லியம் டொம்ப்கின்ஸ் மற்றும் பலர்) கூற்றின்படி குறைந்தது, கடந்த பலநூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக போர் நிகழ்ந்து வருகிறது.ரகசிய விண்வெளி திட்டம்/ராணுவத்திடம் இருந்து கிடைத்த தகவல் மற்றும் கோரி கூட்டின் கூற்றின்படி, அவர்கள் முழு விண்மீன் மண்டலத்திலும் போர்களில் தோற்கடிக்கப்பட்டனர். அதன் பின் நம்முடைய சூரிய குடும்பம் தான் அவர்களின் கடைசி கோட்டையாக இருக்கு என்று கூறப்படுகிறது.
கிரேக்கம், இத்தாலி, சுமேரியன் மற்றும் நம் தமிழகம் போன்ற பல நாகரீகங்களின் பண்டைய மதங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள அரக்கர்கள் இவர்களாக இருக்கலாம்.
எஸ்எஸ்பி/ரகசிய விண்வெளி திட்டத்தில் உள்ளே இருப்பவர்களின் (கோரி, வில்லியம் டாம்ப்கின்ஸ் மற்றும் பலர்) ராணுவ தகவல்களின்படி, சூரிய குடும்பத்தையும் அதன் அருகில் உள்ள 13 விண்மீன்/நட்சத்திர மண்டலங்களையும் பாதுகாக்கும் ‘பாதுகாப்பு தடை’ முடங்கி, சில காலங்களுக்கு பிறகு, கிட்டத்தட்ட 375,000 ஆண்டுகளுக்கு முன், இந்த உயிரினங்கள் நம்முடைய சூரிய மண்டலத்திற்குள் வந்து விட்டது என நம்பப்படுகிறது.
ஸ்டார் வார்ஸ் லிருந்து டெத் ஸ்டார் (இடது), மற்றும் சனி கோளின் துணைக்கோள் ஐயபெட்டஸ் (Iapetus) இருக்கும் வடிவம் (நடுவில்) |
எஸ்எஸ்பி/ரகசிய விண்வெளி திட்டம் கூட்டணி:
பல்வேறு ரகசிய விண்வெளி திட்டங்களிலுள்ள கிளர்ச்சியாளர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர். ஆரம்பத்தில், சோலார் வார்டன் விண்வெளி திட்டம் இந்த கூட்டணி உருவாவதற்கான வேராக இருந்தது. அண்மையில், பிற விண்வெளி விண்கல குழுக்களில் இருந்து வெளியேறியவர்கள் வந்து இணைந்துள்ளார்கள். பிற விண்வெளி திட்டங்களில் இருந்து வெளியேறியவர்கள் (ஐசிசி, ராணுவம் எஸ்எஸ்பி, முதலியன) உட்பட. 2014 அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில், கோள் மனிதர்கள் கூட்டணியுடன் தொடர்பு கொள்ளப்பட்ட பின்னர் இது நடக்க தொடங்கியது (கீழே காண்க). அதுவரை, ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த எஸ்எஸ்பி கூட்டணி முதன்மையாக சோலார் வார்டன் விண்வெளி திட்டத்தால் முழுமையாகவோ அல்லது பெரும்பாலமாக உருவாக்கப்பட்டது.
இந்த கூட்டணியின் குறிக்கோள் நிழல் அரசாங்கம் / இலுமினாட்டி ரகசிய சமூகம் / ரகசிய அரசாங்கத்தின் ஆட்சியை மற்றும் தற்போதுள்ள நிதி அமைப்பை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் அனைத்து விண்வெளித் திட்டங்கள், தொழில்நுட்பங்கள் குறித்து பூமியில் வாழும் மனிதர்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பது, மற்றும் விண்வெளி திட்டங்களில் பயன்படுத்தப்படும் இலவச அண்ட ஆற்றல் (free energy), அனைத்து வகையான மேம்பட்ட மருத்துவ அமைப்புகள், குணப்படுத்துதல், சுற்றுச்சூழலை விரைவாக சுத்தம் செய்தல் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் மனிதர்களின் பயன்பாட்டிற்காக பூமிக்கு கொண்டு வருவதாகும்.
எனவே, பல ஆண்டுகளாக மனித குலத்திற்கு எதிராக நிழல் அரசாங்கம்/இலுமினாட்டி ரகசிய சமூகம்/ரகசிய அரசாங்கத்தால் செய்து வரும் குற்றங்களை முழுமையாக வெளியிட்டு, நிழல் அரசாங்கத்தின் ஆட்சி, அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்து, மனிதர்களையும் உலக நாடுகளையும் அவர்கள் ஆட்சியிலிருந்து விடுதலைசெய்ய விரும்புகிறார்கள்.
இந்த விண்வெளி திட்டம் / பிரிவு, 90களில் அல்லது 90களின் பிற்பகுதியில் ஒரு கிளர்ச்சி படையாக உருவானது. மற்றும் 2000களில் இருந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது (சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்/ISS) முன்னாள் அவர்களின் விண்வெளி கலன்களை பறப்பது, பறக்கும் தட்டு சம்பவங்கள், முதலியவை). இருப்பினும் இவர்களது முயற்சிகள் அனைத்தும் நிழல் அரசாங்கம் மற்றும் அவர்களின் விண்வெளி திட்டங்களான ஐசிசி மற்றும் பிறவற்றால் சவாலுக்கு உள்ளாகிறது. நிழல் அரசாங்கத்திடம் இருந்து ஊடுருவல் முதலிய பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது. மேலும் நிழல்/ரகசிய அரசாங்கத்தால் இவர்களது திட்டங்களையும் குறிக்கோள்களையும் ஓரளவு முறியடிக்கப்பட்டது என்று தெரிகிறது.
உலக கூட்டணி:
இது, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிழல் அரசாங்கம் / இலுமினாட்டி இரகசிய சமூகம் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட அமைப்புகள், நாடுகள், இயக்கங்கள், சமூகங்களின் கூட்டணி / கூட்டமைப்பு ஆகும். ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் இந்த கூட்டணியின் பிரதிநிதி என்று சில ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்டது. நிழல் அரசாங்கத்தின் திட்டத்திற்குப் பதிலாக, நிழல் அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, ஒரு நேர்மறையான உலக அரசாங்கத்தை கொண்டுவர அவர்கள் விரும்புகிறார்கள்.
ஒவ்வொரு குழுவின் கலாச்சாரத்திலும், திட்டங்களிலும் பெரும் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நிழல் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு மற்றும் அவர்களின் நிதி அமைப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் அவர்கள் பல வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், இதை உலகில் பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் கூட்டணியிலும் அவர்களது மாற்று பொருளாதார திட்டங்களிலும் கண்டோம். நிழல் அரசாங்கத்திற்கு / இலுமினாட்டி இரகசிய சமூகத்திற்கு எதிரான போரில் ரஷ்யாவும், சீனாவும் மிகப்பெரிய சக்திகளாக தெரிகிறது. சீனாவில் இன்னும் இல்லுமினாட்டியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக தகவல்கள் இருக்கிறது, அவற்றை முறியடிக்க இப்போதைய அதிபர் க்ஸி ஜின்பிங் முயற்சிகொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வருகிறது.
மேலும், நிழல் அரசாங்கத்திற்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவத்தின் மற்றும் பல்வேறு உளவுத்துறையில் (எஃப்.பி.ஐ, சி.ஐ.ஏ, என்.எஸ்.ஏ, பென்டகன் முதலியன) உள்ள தேசப்பற்றுள்ள மற்றும் துணிச்சலுடைய நபர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இவர்களின் பிரதிநிதி என்று கூறப்படுகிறது (இவரது அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையிலான ராணுவ மக்கள் இருக்கிறார்கள்). டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் இருவருக்கும் எதிரான ஊடகங்களின் அவதூறு பிரச்சாரத்திற்கு இதுதான் காரணம்.
தற்போதைய பிரச்சனைகள்: இங்கேயும் எஸ்எஸ்பி/ரகசிய விண்வெளி திட்டம் கூட்டணியை போலவே இல்லுமினாட்டி/ரகசிய அரசாங்கத்தின் ஊடுருவல் (இந்த கூட்டணிக்குள் சில சக்திவாய்ந்த குழுக்களில் ஊடுருவல் நடந்திருக்கலாம்). இல்லுமினாட்டி/ரகசிய அரசாங்கம் இவர்களது திட்டங்களையும், குறிக்கோள்களையும் ஓரளவு முறியடிக்க முடிந்தது என்று தெரிகிறது.
கோள் மனிதர்கள் கூட்டணி:
இது கடந்த 50 அல்லது 60 ஆண்டுகளில் இருந்து பல்வேறு வானியலாளர்களால் காணப்பட்ட பிரமாண்டமான விண்கலங்களுடன் தோன்றிய மிக உயர்ந்த மற்றும் சக்தி வாய்ந்த வேற்றுகிரகவாசிகளின் அமைப்பு.
இது ஐந்து வெவ்வேறு வேற்று கிரக இனங்களின் கூட்டணியாகும் மற்றும் இவை வன்முறையற்ற உயர்ந்த மனிதர்கள். ஆரம்பத்தில் இலுமினாட்டி / இரகசிய அரசாங்கம் தங்களுடைய கடவுள்கள் திரும்பிவிட்டனர் என்று உற்சாகமாக இருந்தனர். மேலும் அவர்கள் இந்த விண்கலங்களை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை, வெறும் மௌனம் தான் இருந்தது. பிறகு, இந்த வேற்று கிரக வாசிகள் அவர்களின் கடவுள்கள் அல்ல என்று புரிந்தது. இது மட்டுமல்ல, இந்த மனிதர்கள் பாதுகாவலர்களாக கருதப்பட்டனர் (உள் பூமி குழுக்களால், பல்வேறு அறிக்கைகள் மற்றும் வேற்றுகிரகத்தின் தொடர்புகளின் படி).
இந்த கூட்டணியின் நீலப் பறவைக் குழு மனிதகுலத்திற்கு ஒன்றியத்தின் தத்துவங்களை (Law of One) வழங்கியதாக கூறப்படுகிறது, இது ஆன்மிக முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது, மேலும் பூமியின் வரலாற்றையும் விவாதிக்கிறது. கோரி கூட்டின் தொடர்புகளின் படி, மனித குலத்திற்கான அவர்களின் முக்கிய செய்தி என்னவென்றால்: மற்றவர்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துங்கள் (பொதுநலமாக இருக்கவும், சுயநலமாக இருக்காமல்), அதிக அன்பாக இருங்கள். உங்கள் அதிர்வை / நினைவை உயர்த்துவதில் கவனம் செலுத்துங்கள், மற்றும் உங்களையும் மற்றவர்களையும் மன்னியுங்கள். அவர்கள் கடந்த காலங்களில் (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு) மூன்று முறை இந்த செய்திகளை வழங்கி இருக்கிறார்கள் ஆனால் பூமியில் வாழும் மனிதர்களால் இது மத நம்பிக்கைகளாக திரிக்கப்பட்டது.
எகிப்தில் இருக்கும் பிரமிடுகள் நீலப் பறவை மனிதர்களால் கட்டப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது.
தோத் (மூலம்: http://aclassicaday.blogspot.in) |
ஹோரஸ் (மூலம்: http://queerstoryfiles.blogspot.in) |
தோத் (Thoth) மற்றும் ஹோரஸ் (Horus) போன்ற எகிப்திய புராண தெய்வங்கள் பூமியில் கடந்த காலங்களில் உதவிய நீல பறவை மனிதர்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த செய்திகளையும், தொழில்நுட்பங்களையும் கிட்டத்தட்ட 12000 ஆண்டுகளுக்கு முன்பு ரகசிய சமூகங்கள் திசை திருப்பி திரித்ததால் நாம் இழந்தோம். மேலும் பெரும்பாலான வரலாறு மனித குலத்திலிருந்து மறைக்கப்பட்டுவிட்டது. கோள் மனிதர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள நீங்கள் கோரிகூட்டின் தளத்தை பார்வையிடலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு குறிப்புகள் மற்றும் சான்றுகள்:
Ascension Mysteries: Revealing the cosmic ...: David Wilcock (Amazon.com)
Selected By Extra-terrestrials: William Tompkins (Amazon.com)
Insiders Reveal Secret Space Programs & Extraterrestrial Alliances (Amazon.com)
Ancient Builder Race- Recovering Humanity's Billion-Year Legacy
இந்த கட்டுரையும் அதில் உள்ள அனைத்து தகவல்களும் மற்றும் பயன்படுத்த படங்களும் ஒரு பொது சேவையாக உருவாக்கப்பட்டதாகும். இந்த உள்ளடக்கத்தில் பதிப்புரிமை குறித்து அல்லது வேறு ஏதேனும் சச்சரவுகள் இருந்தால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.
- அறிக்கை முடிந்தது -